Tuesday, 1 April 2008

நிலா...ஓர் அறிமுகம் !

நிலாவை உங்கள் யாருக்கும் அறிமுகம் செய்து வைக்க தேவை இல்லைதான்!சிறு குழந்தையாக இருந்த காலம் தொட்டு நாம் ஒவ்வொருவரும் கண்டு களித்து ரசித்த ஓர் தோழிதான்..நிலா!ஆனால் அந்த(இந்த) நிலாவின் பார்வையில் இவ்வுலகும் ,அதில் உள்ளோரும் எவ்வாறு தெரிகின்றனர் என்பதை கூற விளையும் ஓர் முயற்சி ...இந்த தளம் !
பிறக்கும் போதே தலைகீழாக பிறந்தேன் என்று அம்மா சொன்னார்கள் (தலை கீழாக பிறப்பது நேர் எனில் கால் முதலாக பிறந்த நான் தலைகீழ்தானே!).எனவேதான் என் கண்ணோட்டம் பல விஷயங்களில் இவ்வுலக விதிகளுக்கு முரண் பட்டிருக்கின்றதோ?ஆனால் நிலா (வுடன்)வில் இருந்து உலகை ஒரு முறை ரசித்த எவருக்கும் அதை மறக்கவோ, வெறுக்கவோ முடியாதென்பது திண்ணம்!
எங்கிருந்தோ வந்து ,எங்கேயோ செல்லும் தொடர் பயணத்தில் ஒரு அத்தியாயமான இந்த வாழ்வில் தென்றலும்,பொய்கையும்,பூக்களும்,நீரோடையும்,பறவைகளின் ஓசையும் ,அலைகடலும் ,குறுமணலும் ,மழைத்துளியும் ,பனிபொழிவும்.....இன்னும் பல பிறவும் ...நிலவின் ஒளியில் ரசிக்கையில் ... இனிமையே!
இந்த சிறிய அறிமுகத்தோடு துவங்குகின்றன ...நிலவின் சுவடுகள்....!