அதிகாலை உதயமாகும் ஆதவனின் கரம்பட்டு
இதழ் விரிக்கும் வண்ணவண்ண மலர்மொட்டுகள் ......
மலர்களை வருடி தென்றல்பாடும் தாலாட்டு
காண்கையில் மனம்பாடும் ஓராயிரம் பாடல்கள் ......
காலையில் மலர்ந்து மாலையில் உதிரும் மலராகட்டும் ...
மாலையில் விரிந்து மணம்பரப்பிக் குவியும் மலராகட்டும் ....
உயிர்வாழ்தலின் இனிமையை ரசிக்கின்றன ஒவ்வோர் கணமும்!
ஆனால் பகுத்தறிந்து பல்லாண்டுவாழ்ந்திடும் மனிதஇனம்
மட்டும்...
வாழ்வை ரசித்திட தெரியாது தினம்தினம் வருந்திடும்......
இயற்கையோடு இணைந்து உவகை கொள்ள மறந்திடும்!
உறங்கிடும் உணர்வுகளதை உசுப்பி எழுப்பிட விழைந்து -இங்கு
நிலவும் மலரும் பாடுது.............