Sunday, 8 February, 2009

நான் கடவுள் ... அஹம் பிரம்மாஸ்மி !பாலாவின் படங்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த என்றும் தவறியதில்லை ! இந்த படமும் பாலாவின் சரிதத்தில் இன்னொரு அத்தியாயம் . காசியில் தன் மகனை தேடி வரும் தந்தை ..... சவத்தின் முன் உடலெங்கும் சாம்பல் பூசி உடுக்கை அடித்துக் கொண்டிருக்கும் அகோரியாக மகன் ...பொன்னியின் செல்வனில் வரும் கபாலிகர்கள் போன்றவர்கள் இந்த அகோரிகள் ! இவர்கள் சவத்தை உண்டு ,கஞ்சா புகைத்து ,கடும் தவம் மேற்கொண்டு ,ஒருவருக்கு மோட்சமும் ,மறுபிறப்பின்மையும் வழங்க கூடிய சக்தி உடையவர்கள் ...தீது செய்வோரை துவம்சம் செய்பவர்கள் ...என்ற அறிமுகம்! இதற்காக மூன்று ஆண்டுகள் கடினமாக உழைத்ததாக ஆர்யா கூறி இருப்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.


அடுத்து விரிவது பிச்சைகாரர்களின் உலகம்....அதில் பாதி பேர் ஊனமுற்றோர் ... இவர்களின் பாச பிணைப்புகள் ..... இதில் அத்துணை ஏழ்மையிலும் ,கொடுமைகளுக்கு இடையிலும் அவர்கள் நக்கலும் ,கிண்டலுமாய் ...ஒருவருக்கொருவர் அனுசரணையாய் ...கிடைக்கும் நேரங்களில் மகிழ்ந்திருப்பதாக காட்டி இருப்பது "ஆஹா !" சொல்ல வைக்கிறது ! ஆனால் இந்த மகிழ்ச்சியை கூட அவர்களுக்கு விட்டு வைக்காத பணவெறி பிடித்த முதலாளி கூட்டம் .....இதில் சிக்கி தவிக்கும் இவர்களின் ஏதும் செய்ய இயலாத நிலைமை ...இது கலி யுகம் என்பதை நினைவு படுத்துகிறது !
பூஜா...என்ன ஒரு பாத்திரம் இவருக்கு!அற்புதமாய் செய்திருக்கிறார்! ஒரு குருட்டு பிச்சைகார பெண்ணின் கஷ்டத்தை வெளிப்படுத்துகிறேன் என்ற போர்வையில் அப்பெண்ணின் அங்கங்களை காட்டி எக்ஸ்ப்லோஇட் செய்யாமல், அவர் குரலிலும் முகபாவத்திலும் உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பது அருமை!
கருணை கொலை என்பதை நான் என்றுமே ஆதரித்து இருக்கிறேன் ! என்னை அறிந்தோரிடம் நான் எப்போதும் கூறுவது என்றேனும் நான் சுயநினைவற்று ஜடமாய் வாழ நேரிட்டால் தயவு செய்து என்னை சமாதி அடைய உதவிடுங்கள் என்று....உடலை அசைக்க முடியாமல் கண்களால் பார்க்க முடியும் ஒருவரை பார்க்கும்கால் மனமெல்லாம் பதைபதைக்கும் ....இவர் மனம் என்ன பாடு படும் என்றெண்ணி...இவ்வாறு பல வகைகளில் vaalkaiyin vilimbirkku துரத்தப்படும் ஒருவரை ரட்சிக்க அகோரிகள் உதவுகிராறேனில் அவர்கள் ஒரு வகையில் கடவுள்தான் ...ஆனால் 'நான்' இருக்கும் வரையில் நானும் கடவுள் என்பதை உணர முடியாது... naan agalugayil nammil enji iruppadhu kadavul..இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைவார் ஞான தங்கமே...!கஞ்சா அடித்து கடும் தவம் புரிந்து அகோரி ஆவது ரிலேடிவ்லி ஈசி என்று நினைக்கிறேன்!சவம் என்ன ,சாம்பல் என்ன,பிரம்மா என்ன ,ஈஸ்வர் என்ன,கபாலம் என்ன,நிர்வாணம் என்ன கஞ்சா அடிக்குங்கால் !ஹா ஹா ஹா !(அகோரிகளே ,சாபம் விட்டுடாதீர்கள் ப்ளீஸ் )
அகம் பிரம்மாஸ்மி ...நமக்குள் கடவுள்... தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் !இதையே சைண்டிபிகா ஈ =எம் சி ஸ்கொயர் என்றும் கூறலாம். அகோரிகள் நானே பிரம்மா நானே ஈஸ்வர் என்று கூறுகிறார்கள்.ஈஸ்வராக அழிக்கிறார்கள் ,ஆனால் பிரம்மாவாக என்ன படைத்தார்கள் என்று தெரியவில்லை!இந்த படம் முழுதும் பிரம்மாவாக பல்வேறு பாத்திரங்களை படைத்திருப்பவர் பாலாதான் !நயன்தாராவின் சமீப படங்களை பார்த்து இதைவிட காட்டுவதற்கு ஏதேனும் மிச்சம் இருகிறதா என்று வெறுத்து ப்போய் இருந்தோர் கூட்டத்தில் பாலாவும் ஒருவர் போலும்!அம்மணியை போட்டு தாக்கி விட்டார் ...நிச்சயம் நயன்ஸ் நொந்து நூடில்ஸ் ஆகி இருப்பார்!
தமிழ் பட உலகில் ஓர் வித்யாசமான கதை.அதற்க்கு உயிரோட்டமளித்த இளையராஜாவின் இசை ...ஜெயமோகனின் எதார்த்தமான வசனம்...பாலாவின் இயக்கத்தில் பாத்திரங்களின் படைப்பும் நடிப்பும்...அற்புதமான போடோக்ரபி ... பாலாவுக்கு நன்றிகள் !குறையாக பட்டது என்னவெனில் பல இடங்களில் ஹிந்தி மற்றும் சமஸ்க்ரிதம் பயன்படுத்த பட்ட போதெல்லாம் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து கீழே போட்டிருந்தால் என்னை போன்ற சுத்த தமிழர்கள் பயன் அடைதிருப்போம் ...பயன்படுத்தப்பட்ட வரிகளின் தாக்கத்தை முழுமையாக உணர்ந்திருப்போம்!
ஓம் சிவோ ஹம்ம் !


1 comment:

Bala said...

அம்மிணி, ஜெயமோகன் அவரு வலையில உங்களப் பத்தி எளுதிட்டாருங்கோய்.. நெம்பப் பெரியாளாயிட்டீங்க.. சந்தோசமா இருக்குங்க.. இன்னம் நெறைய எளுதுங்க அம்மிணி..